×

அரசு நூலகர் காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்ப கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, அக். 23: திருவாரூர் மாவட்ட நுகர்வோர் மைய மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற நூலகங்கள் 4786 உள்ளன. அதில் காலிப்பணியிடம் மூன்றாவது கிரேடில் 300 பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. 1996ம் ஆண்டு தமிழக அரசால் சிறப்பு காலமுறை விகிதப்படி 816 பணியாளர்கள் ஊர்ப்புற நூலகர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் மாநில பணிமூப்பு பட்டியலின்படி 3ம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த பல வருடங்களாக தினக்கூலி அடிப்படையில் மாத ஊதியமாக ரூ.10,000- மட்டுமே வழங்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளனர்.

பலமுறை போராட்டம் நடத்தியும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை நூலகப் பணியிடங்களும் காலியாக வைக்கப்பட்டுள்ளன. இது சம்மந்தமாக மாவட்ட நுகர்வோர் மையத்திற்கு புகார்கள் வரப்பட்டு உரிய அலுவலகங்களுக்கு அனுப்ப பட்டும் நடவடிக்கை இல்லை. ஆதலால் தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு நூலியல் பட்டப்படிப்பில் மற்றும் நூலக அறிவியல் முதுகலை பட்டப்படிப்பில் பட்டம் பெற்ற தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

Tags : government librarian ,
× RELATED திருவாரூர் வலங்கைமான் அருகே டூவீலர் விபத்தில் வாலிபர் பலி